×

பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம்; சுங்கக் கட்டணக் கொள்ளை குறித்து தணிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலித்துள்ளது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. தென் மாநிலங்களில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் இருந்து மட்டும் ரூ.132 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. அரசு நிறுவனமே விதிகளை மதிக்காமல் அப்பாவி மக்களிடம் சுங்கக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

சுங்கச்சாவடிகளும், அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்களும் மர்மமாகவே நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக்கூடாது. எனவே, பரனூர் சுங்கச்சாவடியில் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். அதன்மூலம் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக்கட்டணத்தை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பரனூர் சுங்கச்சாவடியில் கூடுதல் கட்டணம்; சுங்கக் கட்டணக் கொள்ளை குறித்து தணிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Paranur toll booth ,Anbumani ,CHENNAI ,PAMC ,President ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு:...