×

வீரக்கல்புதூர் சிறந்த பேரூராட்சியாக தேர்வு

மேட்டூர், ஆக.15: மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் புதூர் தேர்வு நிலை பேரூராட்சி, 1982 பிப்ரவரி 24ம் தேதி தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் தற்போதைய மக்கள் தொகை 17,413 ஆகும். பேரூராட்சியில் 6493 குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் உள்ளன. இப்பேரூராட்சி பல வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டதால், தமிழக அளவில் சிறந்த பேரூராட்சிகளுக்கான 3வது பரிசை ெபற்றுள்ளது. இதற்கான பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளை, இன்று சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் வழங்குகிறார். பேரூராட்சி தலைவர் தெய்வானை ஸ்ரீரவிச்சந்திரன், செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் ஆகியோர் இதற்காக சென்னை செல்கின்றனர். பேரூராட்சி தலைர் தெய்வாணை ஸ்ரீரவிச்சந்திரன் கூறியதாவது: சிறப்பான திடக்கழிவு மேலான்மை, குடிநீர் விநியோகம், 100 சதவிகித வரிவசூல் பணிகளுக்காகவும், சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் சிறப்பான பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சியில் வசிப்போருக்கு குடிநீர் சீராக வழங்கப்படுகிறது. குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை தரம்பிரித்து, வளம் மீட்பு பூங்காவில் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சியில் ேசகரமாகும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, வெளியேற்றுவதற்கு நடந்தாய் வாழி காவேரி திட்டத்தின் கீழ் திட்டம் தயாரித்து, அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சியில் 100 சதவீத சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் 3ம் பரிசை பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வீரக்கல்புதூர் சிறந்த பேரூராட்சியாக தேர்வு appeared first on Dinakaran.

Tags : Veerakalputur ,Mettur ,Veerakkal Pudur ,Veerakkal ,Pudur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை...