×

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் எம்எல்ஏ மகராஜன் வழங்கினார்

 

கூடலூர், ஆக. 15: கூடலூர் லேயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகராஜன் வழங்கினார். கூடலூர் அருகேயுள்ள லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கவிதா தலைமை தாங்கினார்.

கூடலூர் நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆண்டிபட்டி எம்எல்ஏ மகராஜன் பங்கேற்றார். இப்பள்ளி மாணவ, மாணவியர் 50 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அவர் தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் திமுக கூடலூர் நகரச்செயலாளர் லோகந்துரை, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தினகரன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி வல்லவன் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

The post அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் எம்எல்ஏ மகராஜன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA Maharajan ,Cuddalore ,Tamil Nadu government ,Govt High School ,Kudalur ,MLA ,Maharajan ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது