×

பொற்பனைக்கோட்டை அகழாய்வு இடத்தை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்

புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் அகழாய்வுப்பணி நடைபெற்று வரும் இடத்தை நேற்று பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் 3.11 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனைத்திடல் வாழ்விட பகுதியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி கடந்த மே 20ம் தேதி துவங்கியது. கடந்த 3 மாதங்களாக அகழாய்வுப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 மீட்டர் நீள, அகலத்தில் 14 குழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ரெங்கசாமி என்பவர் நிலத்தில் 3 குழிகளும், மாரிமுத்து மற்றும் சுந்தரராஜன் ஆகியோரின் நிலத்தில் தலா 4 குழிகளும், நாகர், கருப்பையா மற்றும் பழனியப்பன் ஆகியோரின் நிலத்தல் தலா ஒரு குழியும் தோண்டப்பட்டு வருகிறது. அகழாய்வு பணியில் 35 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அகழாய்வு பணிக்கான இயக்குநர் தங்கதுரை தலைமையிலான ஆய்வு மாணவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அகழாய்வு பணியில் இதுவரை ஏராளமான தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அண்மையில் வட்ட வடிவ செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க தொல்பொருட்கள் கிடைக்கப்பெறுவதால், பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணி, வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில், பொற்பனைக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற முனீஸ்வரர் கோயிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. இத்திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அகழாய்வுப்பணி நடைபெறும் இடம், கோயில் அருகே இருப்பதால் திருவிழாவுக்கு வந்த பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று அகழாய்வு நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர். அங்கிருந்த தொல்லியல் ஆய்வாளர்கள், இதுவரை கண்டறியப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்தி விளக்கினர். இதுகுறித்து அகழாய்வு பணிக்கான இயக்குநர் தங்கதுரை கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், முனீஸ்வரர் கோயில் திருவிழாவுக்கு வந்த பொதுமக்கள் திரளானோர், அகழாய்வு பணி நடைபெறும் இடத்தை பார்வையிட வந்தனர். இதுவரை இங்கு கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது என்றார்.

The post பொற்பனைக்கோட்டை அகழாய்வு இடத்தை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Polpanaikot ,Pudukottai ,Polpanaikottai ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...