×

தியாகதுருகம் அருகே கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள நாகலூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா நெற்பயிர்களை விளைவித்திருந்தனர். அப்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தியாகதுருகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

மேலும் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் பெரிதும் வேதனையடைந்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் வருடந்தோறும் இதுபோல பாதிப்புக்குள்ளாகி வருவதால் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி இருக்கும் வாய்க்கால்களை மீட்கக்கோரி துறை சார்ந்த அலுவலர்களுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தியாகதுருகம் அருகே கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Thiagadurugam ,Thyagathurugam ,Nagalur village ,Thyagathurugam, Kallakurichi district ,
× RELATED 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100க்கு 100...