×

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி அமைச்சர் அன்பில் மகேஷிடம் முதல்வர் நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு தருமபுரி வழியாக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரிமங்கலம் அருகே சென்ற போது அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் அன்பில் மகேஷை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நலம் சீரடைந்த நிலையில் நேற்று அவர் சென்னை திரும்பினார்.

The post உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி அமைச்சர் அன்பில் மகேஷிடம் முதல்வர் நலம் விசாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chief Minister ,Chennai ,M. K. Stalin ,Department of School Education ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...