×

ரூ.7 கோடி கோயில் நிலம் அதிரடி மீட்பு

நாகை: நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே மணக்குடியில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 7.72 ஏக்கர் நன்செய் மானாவாரி நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதை மீட்டு கோயில் வசம் ஒப்படைக்க நாகை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் குமரேசன் உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் நேற்று அந்த நிலம் மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டன. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.7 கோடி என இணை ஆணையர் குமரேசன் தெரிவித்தார்.

The post ரூ.7 கோடி கோயில் நிலம் அதிரடி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nagai ,Nansei ,Tanthonreeswarar temple ,Manakudi ,Thalaignayiru ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில்...