×

பாமக தலைவர் அன்புமணியை ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலம்: பா.ம.க. தலைவர் அன்புமணியை ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி; கர்நாடக அரசு திட்டமிட்டு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா காங்கிரஸ் மதிக்கவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்; நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கூறினார்.

பா.ம.க. தலைவர் அன்புமணியை ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை. அன்புமணி என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்; அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை. ஊடகங்களில் மட்டுமே அன்புமணி கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார். டெல்லியில் கூட்டணியில் இருக்கிறோம்; தமிழ்நாட்டில் எந்த அணியிலும் இல்லை என அன்புமணி பேசியதற்கு எடப்பாடி பதிலடி கொடுத்தார்.

The post பாமக தலைவர் அன்புமணியை ஒரு அரசியல்வாதியாகவே கருதவில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம் appeared first on Dinakaran.

Tags : BAM ,Anbumani ,Edappadi Palaniswami Kattam ,Salem ,B.M.C. ,Edappadi Palaniswami ,Bamaka ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...