×

ரூ.209.68 கோடியில் முதல்வரால் திறக்கப்பட்ட பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலை பராமரிப்பு பணி

 

பெரம்பலூர், ஆக. 12: ரூ.209.68 கோடியில் அமைக்கப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை சென்னை தலைமைப் பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வுசெய்தார். ஸ்டேட் ஹைவே-142 எனப்படும் பெரம்பலூர் -துறையூர் நெடுஞ் சாலையில், செஞ்சேரி முதல் துறையூர் புறவழிச் சாலை வரையிலான 32 கிலோமீட்டர் தூரத்திற்கு, சென்னை- கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின்கீழ், சென்னை நெடுஞ்சாலைத் துறையின் திட்ட இயக்குநகரத்தால், தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவியைக் கொண்டு ரூ.209.68 கோடியில், இருவழித்தட சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் மற்றும் நக்கசேலம், குரும்பலூர் நகர பகுதிகளுக்கு மாற்றாக 3.50 கிலோமீட்டர் தூரத்திற்குப் புறவழிச் சாலை அமைத்தல் மற்றும் 7வருட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட் டமிடப்பட்டு, பெரம்பலூர்- துறையூர் ஸ்டேட் ஹைவே -142அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏற்கனவே ஒரு வழிச் சாலையாக இருந்த சாலை, தற்போது இருவழி சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் பாத்ரூம் வசதிகளுடன் அடங்கிய 2 பயணியர் நிழற்குடைகள், இரவை பகலாக்கும் மின் விளக்குகள், ஒவ்வொரு ஊர்களிலும் சாலை ஓரம் நிரந்தர தடுப்பு சுவர்களாக, இரும்பினால் ஆன பேரிக்காடுகள், ஒவ்வொரு ஊர்களுக்குமான ரிப்லெக்டர் பெயர் பலகைகளுடன் இந்த நவீனசாலை திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு நிகராக அமைக்கப்பட்டு, தமிழக முதல்வரால் 2022 நவம்பர் இறுதியில் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. வரக்கூடிய பருவமழை முன்னேற்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு பணிகளை நேற்று(11ம் தேதி) சென்னை- கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் தலைமை பொறியாளர் (சென்னை) செல்வன் நேரில்ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சாலையோரம் அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக நடப்பட்டு கருகிப் போன மரக்கன்றுகளுக்கு பதிலாக புதிய மரக் கன்றுகளை நட்டு ஈடு செய்யும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சென்னை- கன்னியாகுமரி தொழில் தட திட்ட கோட்டப் பொறியாளர் (நெ) கடலூர் சுந்தரி, பெரம்பலூர் உதவி கோட்டகோட்ட பொறியாளர் (நெ) ஜெயந்தி, பெரம்பலூர் இளநிலை பொறியாளர் (நெ) விஜயா, ஒப்பந்ததாரர் கள் மற்றும் பராமரிப்புக் குழுவினர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ரூ.209.68 கோடியில் முதல்வரால் திறக்கப்பட்ட பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலை பராமரிப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Perambalur- ,Chief Minister ,Perambalur ,Perambalur-Dhartiyur ,Dhartiyur ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...