×

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு 5 ஆயிரம் மாணவர்கள் மனிதசங்கிலி பேரணி

பழநி, ஆக.12: பழநியில் காவல்துறை சார்பில் நடந்த போதை எதிர்ப்பு பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் பழநியில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு மாணவர் பேரணி நடந்தது. டிஎஸ்பி சரவணன் தலைமை வகித்தார். பழநி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பழநி மயில் ரவுண்டானா மையத்தில் இருந்து திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை வளாகம் வரையிலும், ரயில்வே பீடர் சாலையில் வேலவன் விடுதி வரையிலும், மலைக்கோயில் சாலையில் அரசு மருத்துவமனையின் பின்புறம் வரையிலும், காந்தி மார்க்கெட் சாலையில் வேல் ரவுண்டானா வரையிலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சங்கிலி பிணைப்பாக நின்றனர். போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, போதைப்பொருள் தடுப்புச் சட்டம், அதற்கான தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழநியாண்டவர் மகளிர் கல்லூரி, பழநியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு 5 ஆயிரம் மாணவர்கள் மனிதசங்கிலி பேரணி appeared first on Dinakaran.

Tags : -drug awareness 5 ,chain ,Palani ,Tamil Nadu Government ,anti-drug ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் சங்கிலி பறிப்பு