×

நடிகர் சத்யராஜ் தாயார் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நடிகர் சத்யராஜ் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை இயற்கை எய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன். அரவணைத்து ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் சத்யராஜுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு மனைவியும், நடிகர் வாசு விக்ரம் தாயாருமான லலிதாம்மாள் மறைவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post நடிகர் சத்யராஜ் தாயார் மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Sathyaraj ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Nathampal Kalingarayar ,
× RELATED திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு...