×

நிலவு ஆராய்ச்சிக்கு 47 ஆண்டுகளுக்கு பிறகு லூனா-25 விண்கலத்தை ஏவியது ரஷ்யா

மாஸ்கோ: நிலவை ஆராய்வதற்காக ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பிறகு லூனா-25 விண்கலத்தை ரஷ்யா விண்ணில் செலுத்தியது. ரஷ்யா கடந்த 1976ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 47 ஆண்டுகளுக்கு பின்னர், நிலவை ஆய்வு செய்ய லூனா-25 விண்கலத்தை இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2.10 மணியளவில் விண்ணில் செலுத்தியது. ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் வாஸ்டோக்னி ஏவுதளத்தில் இருந்து லூனா-25 விண்ணில் ஏவப்பட்டது.

லூனா-25 விண்கலம் 1,800 கிலோ எடை கொண்டதாகும். நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்கள், எரிபொருள், ஆக்சிஜன், குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்ய உள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை 5 நாளில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, 4 முதல் 5 நாட்கள் நிலவின் பாதையில் சுற்றி வரும். பின்னர் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான இடத்தை ஆய்வு செய்து தரையிறங்க உள்ளது.

The post நிலவு ஆராய்ச்சிக்கு 47 ஆண்டுகளுக்கு பிறகு லூனா-25 விண்கலத்தை ஏவியது ரஷ்யா appeared first on Dinakaran.

Tags : Russia ,MOSCOW ,Dinakaran ,
× RELATED மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும்...