×

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 7 மாதத்தில் 2000க்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் இந்த வருடம் 7 மாதங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 வருடங்களில் 16,944 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகள் எண்ணிக்கை 6,583 ஆகும். 126 சிறுவர், சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு நாளுக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 5 வருடங்களில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 1316 சிறுமிகள் கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடம் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இதுவரை 2,234 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 833 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 8 ஆகும்.

The post கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 7 மாதத்தில் 2000க்கும் அதிகமான போக்சோ வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...