×

கொள்ளிடம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை

 

கொள்ளிடம்,ஆக.11: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக இரவு நேரங்களில் மிதமான முதல் அதிகமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு காற்று வேகமாக வீச ஆரம்பித்து தொடர்ந்து இரண்டு மணி நேரம் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணி வரை மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது.

இரவு வீசிய காற்றினால் பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து கீழே விழுந்துள்ளன. இதனால் கொள்ளிடம் பகுதியில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. பாசன வாய்க்கால்கள் மற்றும் வயல்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மட்டும் மழை அதிகமாகவே பெய்து வருகிறது.

நேற்று காலை கொள்ளிடத்தில் மழையின் அளவு 49 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சம்பா சாகுபடி செய்வதற்கு நாற்றங்கால் அமைப்பதற்கும் நிலங்களை உழுவதற்கும் இந்த மழை ஏற்றதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

The post கொள்ளிடம் பகுதியில் காற்றுடன் பலத்த மழை appeared first on Dinakaran.

Tags : Kodutam ,A.11 ,Mayiladuthura ,Kodu ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது