×

பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் மருத்துவ மாணவர் விடுதி: காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

 

தஞ்சாவூர், ஆக.11:தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் சுமார் 100 மாணவர்கள் தங்கும் பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியினை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் விடுதியினை பார்வையிட்டு விடுதியில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநாகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகா தேவி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல், தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் மருத்துவ மாணவர் விடுதி: காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார் appeared first on Dinakaran.

Tags : Medical Student Hostel ,Pilliyarpatti Panchayat ,Chief Minister ,M. K. Stalin ,Thanjavur ,college student ,Thanjavur Pilliyarpatti panchayat ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...