×

காலைசிற்றுண்டி திட்டம் துவங்க உள்ளதையொட்டி அரசு துவக்கப்பள்ளியில் சமையல்கூடத்தை கலெக்டர் ஆய்வு

 

முசிறி, ஆக.11: காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் துவங்க உள்ளதையொட்டி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று பள்ளி கட்டிடம் மற்றும் சமையல் கூடத்தை ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் காட்டுப்புத்தூர் பகுதியில் தமிழக அரசு ஆரம்பப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் அனைத்து துவக்க பள்ளிகளும் துவங்க உள்ளதை முன்னிட்டு காட்டுப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சமையல் கூடம் மற்றும் புதிதாக ரூ.7.82 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளிக்கட்டிடம் மற்றும் சமையல் கூடத்தை ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

பின்பு காட்டுப்புத்தூர் கிழக்கு பகுதியில் உள்ள நியாய விலை கடைக்குச் சென்று பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்பு மூட்டையில் உள்ள அரிசியில் தரம் குறித்து கண்டறிந்தார். நாகையநல்லூர் ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையில் காய்கறி செடி, மல்லிகை செடி, தீவணப் புல், காளான் கொடி, பண்ணை குட்டையில் வளர்க்கப்படும் மீன், மா, நடவு ஆகியவற்றை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானமணி, சரவணகுமார், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மல்லிகா, காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது, காட்டுப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சிவசெல்வராஜ், தொட்டியம் மண்டலத் துணை வட்டாட்சியர் கவிதா, தொட்டியம் சமூக நல தனி வட்டாட்சியர் புஷ்பராணி, காட்டுப்புத்தூர் வரி ஆய்வாளர் மணிகண்டன், காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் திருஞானம், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உடன் சென்றனர்.

The post காலைசிற்றுண்டி திட்டம் துவங்க உள்ளதையொட்டி அரசு துவக்கப்பள்ளியில் சமையல்கூடத்தை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Musiri ,Kattuputtur ,Dinakaran ,
× RELATED இளங்கலை படிப்பில் சேர முசிறி அரசு கல்லூரியில் சிறப்பு கலந்தாய்வு