×

கோயில் விழாவிற்காக ஆக.13ல் சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை

ஆர்.எஸ்.மங்கலம், ஆக.11: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர் அருகே திருத்தேர்வளையில் அமைந்துள்ளது ஆகாச முத்துக் காளியம்மன் கோயில். இக்கோயிலின் 31ம் ஆண்டு லட்சார்ச்சனை விழாவினை முன்னிட்டு காப்புக்கட்டி பால்குடம் எடுத்தல் நடைபெற உள்ளது. ஆகையால் திருவிழா காலத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயிலின் முக்கிய நிகழ்வு காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், வெளி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த சூழ்நிலையில் வெளியூர்களில் இருது வரக்கூடிய பக்தர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாமல் ஆண்டுதோறும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். திருவிழாவின் தொடக்கமாக நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் சிறப்பாக நடைபெற்றது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது, ஆண்டு தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோயில் திருவிழாவிற்கு வருகிறார்கள். இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.

இந்த நிலையில் கோயிலுக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டு வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி வரும் நிலை உள்ளது. இந்த நிலையினை மாற்றிட அரசு போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டு திருவாடானை, ,ஆர்.எஸ்.மங்கலம், தேவகோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து காளியம்மன் கோயிலுக்கு பொது மக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி வருகிற 13ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என்றனர்.

The post கோயில் விழாவிற்காக ஆக.13ல் சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RS Mangalam ,Akasa Muthu Kaliamman ,Tirutherwali ,Anandur ,
× RELATED சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்