×

மாடு முட்டியதில் காயமடைந்த குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டியதில் காயமடைந்த குழந்தை ஆயிஷாவின் உடல்நிலை சீராக உள்ளது என தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆயிஷா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக உடலுக்குள் எந்த வித பெரிய பாதிப்பும் இல்லை; வெளி காயங்கள் தான், இன்று மாலை ஆயிஷா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினார்.

The post மாடு முட்டியதில் காயமடைந்த குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Aisha ,Chennai Arumbakkam ,
× RELATED தாய்ப்பால் விற்பனை புகார்:...