×

முறைகேடு புகார் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க ஐகோர்ட்கிளை உத்தரவு

மதுரை: முறைகேடு புகார் தொடர்பாக ஊரக வலர்ச்சித்த்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. காவலாப்பட்டி ஊராட்சித் தலைவர் மற்றும் துணை தலைவர் ஊராட்சி நிதியில் ரூ.31 லட்சம் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. முறைகேடு செய்த ஊராட்சித் தலைவர் மற்றும் துணை தலைவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடகோரி மனுதக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முறைகேடு புகார் தொடர்பாக ஊரக வளர்ச்சித்த்துறை முதன்மை செயலாளர், திண்டுகல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 3 வாரத்தில் பதிலளிக்க  உத்தரவிட்டார். மேலும், காவலாப்பட்டி ஊராட்சித் தலைவர் மற்றும் துணை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டு  வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

The post முறைகேடு புகார் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க ஐகோர்ட்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Rural Development ,Principal Secretary ,Madurai ,Madurai High Court ,Kavalapatti ,Chief Secretary ,Rural ,Development ,Dinakaran ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...