இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள குரூப் ‘சி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1Civilian Motor Transport Driver (OG): 1 இடம் (ஒபிசி). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட டிரைவர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கனரக மற்றும் இலகுரக வாகனத்துக்குரிய டிரைவிங் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2Motor Transport Fitter (Mechanical): 2 இடங்கள் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்மோமொபைல் ஒர்க்ஷாப்பில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3Multi Tasking Staff (Motor Transport Cleaner): 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் ஒர்க்ஷாப்பில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4Multi Tasking Staff (Mali): 1 இடம் (எஸ்சி). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
5Multi Tasking Staff (Peon): 2 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆபீஸ் அசிஸ்டென்டாக 2 வருட பணி அனுபவம்.
6Multi Tasking Staff (Sweeper): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு: 18 லிருந்து 27க்குள். சம்பளம்: 7வது ஊதியக் குழு விதிமுறையின்படி வழங்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2023.
The post கடலோரக் காவல் படையில் குரூப் ‘சி’ பணியிடங்கள் appeared first on Dinakaran.
