×

நர்சை நம்பாதே… பெண்களை நம்பாதே… இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 11 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட்

கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் உள்ள புகழ்பெற்ற கிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ மாணவர்கள், நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள பத்ரா படத்தின் ‘நம்பாதே நம்பாதே செவிலியர்களை நம்பாதே, நம்பாதே நம்பாதே பெண்களை நம்பாதே’ என்ற பாடலுக்கு செவிலியர்கள் உடை அணிந்து நடனமாடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் தயாரித்தனர். இதை மாணவர் மகேஷ் ரெட்டியின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவியது. இதற்கு செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ரீல்ஸ் பதிவிட்ட ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவ மாணவர்கள் 11 பேரை ஒரு வார காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து முதல்வர் டாக்டர் ஈஸ்வரா ஹோஸ்மானி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் மற்றொரு வீடியோவை உருவாக்கி அதை இன்ஸ்டாவில் பதிவிட்டனர். அதில் ரீல்கள் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டவை என்றும், இதற்காக செவிலியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

The post நர்சை நம்பாதே… பெண்களை நம்பாதே… இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட 11 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Reels ,Instagram ,Kims Hospital ,Hupalli, Karnataka ,Badra ,Brajwal Devaraj ,Suspend ,
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்