×

லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான்கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை : பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு!!

இஸ்லாமபாத் : பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(70) பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில் இம்ரான் கான் கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது வௌிநாட்டு தலைவர்கள் கொடுத்த நினைவு பரிசுகள், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பாகிஸ்தான் அரசு கருவூலமான தோஷகானாவிடம் சேர்க்காமல் குறைந்த விலைக்கு அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என இஸ்லாமாபாத் நீதிமன்ற நீதிபதி ஹுமாயூன் திலாவர் தீர்ப்பு வழங்கினார்.இந்த வழக்கில் 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது லாகூரில் உள்ள சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இம்ரான் கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான்கான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை : பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Lahore ,Election Commission of Pakistan ,Islamabad ,Pakistan Tehreek-e-Insaf Party ,Prime Minister of ,Pakistan ,Dinakaran ,
× RELATED லாகூர் ஒப்பந்தத்தை மீறியதாக நவாஸ் ஷெரீப் ஒப்புதல்