×

திருமணமான 37 நாளில் இளம்பெண் தற்கொலை

 

விருதுநகர், ஆக.9: சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபா(26). இவரை கடந்த ஜூன் 1ல் விருதுநகர் அருகே கடம்பன்குளத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். தினசரி தீபா தனது தாய் மீனாட்சியிடம் பேசி வந்த நிலையில், ஒரு நாள், தனது கணவர், ஏற்கனவே ஒருபெண்ணை விரும்பி உள்ளார். அந்த பெண் கணவரின் செல்போனிற்கு ‘மிஸ் யூ’ என மெசேஜ் அனுப்புவதாகவும், சரவணக்குமாரும் பதிலுக்கு ‘மிஸ் யூ’ என அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு, காலப்போக்கில் சரியாகி விடும் தாய் ஆறுதல் கூறி உள்ளார். திருமணத்தின் போது ரூ.18 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக தெரிவித்த நிலையில், சரவணக்குமார் ரூ.10 ஆயிரம் மட்டும் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் செய்முறை செய்ய வேண்டுமென சரவணக்குமார் தரப்பில் கூறி வந்ததால் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தாய் மீனாட்சிக்கு தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மீனாட்சி, தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சூலக்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post திருமணமான 37 நாளில் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Virudunagar ,Arugugam ,Chennai Korukbeta ,deepa ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...