×

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வித்யாதன் உதவித்தொகை

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களின் கல்லூரிக் கல்விக்கான உதவியை சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் வித்யாதன் ஸ்காலர்ஷிப் திட்டம் செய்துவருகிறது. இந்த உதவித்தொகைத்திட்டத்துக்கு 10ம் வகுப்பு முடித்தபிறகு, தேர்வு மற்றும் நேர்காணல் உள்ளிட்ட கடுமையான செயல்முறைகள் மூலம் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு 11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால், அவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை தொடரவும் உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்புகளுக்கான உதவித்தொகையானது மாநிலம், படிப்பு, காலம் போன்றவற்றைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை மாறுபடும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அறக்கட்டளையின் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, கோவா, ஒடிசா, புதுடெல்லி மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாநிலத்துக்கும் தனி தனியாக கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கு வித்யாதன் உதவித்தொகை 2023-24 கல்வியாண்டுக்கு தற்போது வழங்கப்பட உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிப்பதற்கான தகுதி, தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழு விவரங்களை https://www.vidyadhan.org/apply என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொண்டு இலவசமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 31.

The post பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வித்யாதன் உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Sarojini Damodaran Foundation ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...