×

ஒற்றைப்பெண் குழந்தைகளுக்கான சிபிஎஸ்இ உதவித்தொகை

குடும்பத்தில் உள்ள ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகைத் திட்டத்தை ‘மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று சொல்லப்படும் சிபிஎஸ்இ வழங்கி வருகிறது. சிபிஎஸ்இ வழங்கும் இந்த கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சிபிஎஸ்இ உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் வரவேற்கப்படும். புதிய விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பத்திற்கான தேதிகள் உதவித்தொகைக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

10ம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள். சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள். எனினும் கல்வியாண்டில் மாதந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தியர்கள் மட்டுமே இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிப்பைத் தொடர சிபிஎஸ்இ உதவித்தொகையின் கீழ் ஒரு மாணவி பெறும் நிதி உதவியின் அளவு மாதத்திற்கு ரூ.500 (ஆண்டுக்கு 6,000 ரூபாய்) ஆகும். இந்த உதவித்தொகையின் அதிகபட்ச காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இருப்பினும், முந்தைய ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைக் கருத்தில் கொண்டு, மொத்த உதவித்தொகைகளின் எண்ணிக்கை 1400 முதல் 1600 வரை மாறுபடும் (தோராயமாக). பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாகவும் திறமையான மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

The post ஒற்றைப்பெண் குழந்தைகளுக்கான சிபிஎஸ்இ உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : CBSE ,Central Board of Secondary Education ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...