×

ஆயுதக்குழுக்களின் ஆதிக்கத்தால் தொடரும் மோதல், தாக்குதல்!: காவல்துறை வாகனங்களை தீயிட்டுக் கொளுத்திய ஹைதி மக்கள்..!!

ஹைதி: கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியில் ஆயுத குழுக்களை கட்டுப்படுத்தக் கோரி பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரமே போர்க்களம் போல் ஆகியுள்ளது. உள்நாட்டு கலவரங்களுக்கு பஞ்சம் இல்லாத ஹைதியில் அரசியல் ரீதியான வலுவான அரசு அங்கு இல்லாததால் ஆயுத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவ்வப்போது ஆயுதக் குழுக்கள் மோதிக் கொள்வதால் அங்கு வாழும் மக்களின் நிலை எப்போதும் பதற்றத்துடனேயே கழிகிறது. இந்த நிலையில் தற்போது ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைவாய்ப்பின்மை, பட்டினி, அரசியல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையின்மையால் தவித்து வரும் மக்கள், போலீசாருக்கு எதிராக திரும்பியுள்ளனர். ஏராளமான போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. ஆயுதக்குழுக்களை கட்டுப்படுத்தததால் மக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்சின் காலனி அதீகத்தின் கீழ் இருந்த ஹைதி, அந்த நாட்டிடம் இருந்து விடுதலை பெற்றுக்கொண்ட முதல் சுதந்திர கறுப்பின குடியரசு நாடாகும்.

அத்துடன் அடிமைத்தன முறையை எதிர்த்து அதில் வெற்றியும் கண்ட நாடு என்பதால் அடிமைத்தனமுறையால் பொருளாதாரத்தில் பலனடைந்த அமெரிக்காவும், பிரான்சும், ஹைதியை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தி வைத்துள்ளன என்பது குற்றச்சாட்டாகும். ஒருபுறம் தீராத உள்நாட்டு வன்முறை, மறுபுறத்தில் 2010ல் ஏற்பட்ட நிலநடுக்கம், 2016ல் ஏற்பட்ட புயலில் சிக்கி ஹைதி நாடு இன்னும் மீண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆயுதக்குழுக்களின் ஆதிக்கத்தால் தொடரும் மோதல், தாக்குதல்!: காவல்துறை வாகனங்களை தீயிட்டுக் கொளுத்திய ஹைதி மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Haiti ,Caribbean ,
× RELATED ராம்சீதா பழத்தின் நன்மைகள்!