×

விவசாயியிடம் செயின் பறிக்க முயற்சித்த 2 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 8: பூதலூர் அருகே விவசாயியிடம் செயின் பறிக்க முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். பூதலூர் காங்கேயம் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தமுருகேசன் (53). விவசாயி. இவர் தனது அண்ணன் ராமலிங்கத்துடன் செங்கிப்பட்டி சாலையில் உள்ள தட்டான் குளக்கரைக்கு முனியாண்டவர் கோயிலுக்கு சென்று விட்டு பூதலூர் செல்ல பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் வந்த 3பேர் முருகேசன் கழுத்தில் அணிந்து இருந்த வெள்ளி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் அவர் சத்தம் போடவே சங்கிலியை விட்டு விட்டு பைக்கில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து பூதலூர் போலீசில் அவர் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்- இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சங்கிலியை பறிக்க முயன்றது தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டையை சேர்ந்த சாமிநாதன் (23), வீரமணி (19) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர்.

The post விவசாயியிடம் செயின் பறிக்க முயற்சித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thirukkadupalli ,Boothalur ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி...