×

கலெக்டர் ஆபிசை பெண்கள் முற்றுகை

சேலம், ஆக. 8: சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. இதில், காடையாம்பட்டி அடுத்த நடுப்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதுகுறித்து பெண்கள் கூறுகையில், ‘‘தளவாய்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் முறையாக விநியோகம் செய்வதில்லை. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திலும், அதிமுக கவுன்சிலரை சந்தித்தும், கோரிக்கை விடுத்தோம். ஆனால் முறையான பதில் அளிக்காததுடன் தகாத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுக்கின்றனர். தற்போது குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, முறையான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

The post கலெக்டர் ஆபிசை பெண்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District Public Grievance Meeting ,Collector ,Karmegam ,Kadaiyambatti ,Dinakaran ,
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!