×

கேட்பாரற்று நின்ற காரில் ₹1.26 லட்சம் குட்கா பறிமுதல்

சேலம், ஆக.7:சேலம் சத்திரம் ரயில்வே கூட்ஸ்ஷெட்டுக்கு அருகே லாரிகள் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று நின்ற காரில் இருந்து போலீசார் ₹1.26 லட்சம் மதிப்புள்ள 184 கிலோ குட்காவை மீட்டனர். தமிழ்நாடு அரசு புகையிலை பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு ரயில், பஸ், லாரி, வேன், காரில் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. ேசாதனைச்சாவடி ேபாலீசார், மதுவிலக்கு மற்றும் உள்ளூர் போலீசார் அவ்வப்போது சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் புகையிலை பொருட்கள் கடத்துவது குறையவில்லை.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கூட்ஸ்ஷெட்டுக்கு அருகே லாரிகள் நிறுத்துமிடத்தில் மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட ஒரு கார் நீண்டநேரமாக கேட்பாரற்று நிற்பதாக பெரியேரிப்பட்டி விஏஓ ரமேஷ் செவ்வாய்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் எஸ்எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் ₹1.26 லட்சம் மதிப்புள்ள 184 கிலோ குட்கா இருந்தது. அதை போலீசார் மீட்டு, அந்த காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அந்த கார் யாருடையது என்பது குறித்து முழு விபரம் தெரியவில்லை. காரின் நம்பரை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேட்பாரற்று நின்ற காரில் ₹1.26 லட்சம் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Salem ,Salem Chatram Railway Cootsshed ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு...