×

திட்டக்குடி அருகே பரபரப்பு அளவீடு செய்ய சென்ற அரசு ஊழியர் மீது தாக்குதல்

 

திட்டக்குடி, ஆக. 7: நாமக்கல் மாவட்டம் நாமக்கல் கீராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (42). இவர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வெள்ளியங்கிரி, உதவியாளர் பாலபாரதி ஆகியோர் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் உள்ள கோபால் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது வீட்டுமனைகளை அளவீடு செய்ய சென்றனர்.

இவர்களது இடத்தை அளவீடு செய்து விட்டு பின் அதே கிராமத்தில் உள்ள பிச்சப்பிள்ளை என்பவரது இடத்தை அளவீடு செய்ய நடந்து சென்றார். அப்போது அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த ஞானவேல் (50) என்பவர் நில அளவையர் வெள்ளியங்கிரியை வழிமறித்து நான் இதற்கு முன்னாடி என் இடத்தை அளவு செய்ய மனு கொடுத்துள்ளேன். அதை ஏன் செய்யவில்லை என கூறி, ஆபாசமாக திட்டியதோடு, சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நில அளவையர் வெள்ளியங்கிரி சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திட்டக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நில அளவையர் வெள்ளியங்கிரி கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு ஊழியரை தாக்கிய ஞானவேலை கைது செய்தனர்.

The post திட்டக்குடி அருகே பரபரப்பு அளவீடு செய்ய சென்ற அரசு ஊழியர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Phetakkudi ,Velliangiri ,Namakkal Kirampur ,Namakkal district ,Thitakudi ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்