×

குள்ளனம்பட்டி அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

திண்டுக்கல், ஆக. 7: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, கோபால்பட்டி, நத்தம் ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து குஜிலியம்பாறை, எரியோடு வழியாக திண்டுக்கல்லில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் சேகரிக்கபட்டு, அங்கிருந்து பாலகிருஷ்ணாபுரம், அனுமந்தன் நகர் வழியாக நத்தம் செல்கிறது. இதில் நேற்று நுகர்பொருள் வாணிப கழகம் முன்பு கூட்டு குடிநீரை குழாய் வாழ்வில் இருந்து நீர் வெளியேறி பல மணி நேரம் தண்ணீர் வீணாகி சென்றதால் சாணார்பட்டி, நத்தம் பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து குடிநீர் குழாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், பல மணி நேரம் தண்ணீர் வீணாக சென்றதையடுத்து குடிநீர் நிறுத்தப்பட்டது. திண்டுக்கல் நத்தம் ரோட்டில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் அடிக்கடி ஏற்படும் பழுதை நிரந்தரமாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post குள்ளனம்பட்டி அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Kununtampatti ,Dindigul ,Chanarpatti ,Gopalpatti ,Nattam ,Kanuniyampatti ,Dinakaran ,
× RELATED ஆவத்திபாளையம் ஓடைக்குள் திறந்துவிடப்படும் சாயக்கழிவுகள்