×

கலைஞர் நூற்றாண்டு விழா பூங்கா தளபதி முருகேசன் திறந்து வைத்தார்

 

சூலூர்,ஆக.7: தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரங்கள்,நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் துவக்கப்பட்டு,தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் எட்டாம் நாள் பிரச்சாரமாக நேற்று சூலூர் பட்டணம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை நினைவுபடுத்தும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழா சிறுவர் பூங்காவைத் திறந்து வைத்தார். உதய் நகர் அமைந்துள்ள ரூ.4 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை குழந்தைகளுக்கு வழங்கினார். பட்டணம் திருமால் நகர் பகுதியில் ஒன்றிய உறுப்பினர் நிதியிலிருந்து காங்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையிலும் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பட்டணம் செல்வகுமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் ரகு, துரைராஜ், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன்,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபு, தெற்கு ஒன்றிய பொருளாளர் வடிவேல்,மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வெங்கடுபதி கவுன்சிலர் ஓ.பழனிச்சாமி, கலங்கல் சிவகுமார்,பசுபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தெரு முனை பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா பூங்கா தளபதி முருகேசன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Park ,Commander ,Murugesan ,Sulur ,Chief Minister ,Dr. ,Kalaignar ,Tamil Nadu ,Coimbatore ,
× RELATED பாஜக நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர் மகன் கைது..!!