×

கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்

கமுதி, ஆக. 7:கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை பதிவேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் மண்டல பொறுப்பாளர் உதயலட்சுமி, விஏஓ நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி அழகர்சாமி, துணைத் தலைவர் மைதீன், ஊராட்சி செயலர் முத்துராமு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தன்னார்வலர்கள் தமிழ்ச்செல்வி, முத்துபாப்பாத்தி ஆகியோர் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பெற்று ஆன்லைன் வாயிலாக பதிவு செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்பம் அளித்தனர்.

இதேபோல் கமுதி பகுதியில் இரண்டாம் கட்டமாக கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவம் பெறும் முகாம் தொடங்கி நடைபெற்றது. வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகத்தில், வருவாய் ஆய்வாளரும், மண்டல பொறுப்பாளருமான மணிவல்லபன் முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளித்தனர். தன்னார்வலர்கள் இதைப்பெற்றுக் கொண்டனர். முதற்கட்டமாக கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 51 மையங்களில் இதுவரை 18,700க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Keezaramanadi Panchayat ,Dinakaran ,
× RELATED கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்...