திருவனந்தபுரம்: சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை பள்ளியிலேயே பயிற்றுவித்து மாணவர்களுக்கு இவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கேரள அரசு தீர்மானித்தது. இதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த பாடங்களும் சேர்க்கப்பட உள்ளன. இந்தப் பாடங்களைப் படித்து பிளஸ் டூ தேர்வாகும் மாணவர்களுக்கு கையோடு பழகுனர் உரிமமும் வழங்கப்படும்.
பிளஸ் டூ முடித்து 18 வயது நிரம்பியவர்களுக்கு பழகுநர் உரிமம் எடுக்காமலேயே நேரடியாக நிரந்தர லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பொதுக் கல்வித்துறை அமைச்சகத்திற்கும், முதல்வருக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு கூறியுள்ளார்.
The post பழகுநர் உரிமம் எடுக்கத் தேவையில்லை; பிளஸ் 2 படித்திருந்தால் நேரடியாக ஓட்டுநர் லைசென்ஸ் appeared first on Dinakaran.
