×

ராமர் கோயிலுக்கு 400 கிலோ பூட்டு

அலிகார்: அயோத்தி, ராமர் கோயிலுக்கு உலகின் மிக பெரிய பூட்டை அன்பளிப்பாக வழங்க உபி கைவினைஞர் முடிவு செய்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் ஜனவரி 21,22 அல்லது 23 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் கோயிலின் குட முழுக்கு விழா நடத்த ராமஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், உபியின் அலிகார் பகுதியை சேர்ந்த கைவினைஞர் சத்ய பிரகாஷ் சர்மா என்பவர் ராமர் கோயிலுக்கு 400 கிலோ எடையில் பூட்டு ஒன்றை தயாரித்து வருகிறார்.

இதுகுறித்து சத்ய பிரகாஷ் கூறுகையில்,‘‘ என்னுடைய குடும்பத்தினர் பல ஆண்டுகளாக பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயிலுக்காக 6 அடி உயரம்,3 அடி அகலத்தில் பூட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அதை பார்த்த சிலர் அதை விட பெரிய பூட்டை தயாரிக்கும்படி கூறினர். அதையடுத்து 10 அடி உயரம்,4.5 அடி அகலத்தில் பூட்டை தயாரித்து வருகிறேன். இந்த பூட்டு தயாராகி விட்டது. ஆனால், ஒரு சில மாற்றங்களை செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் கோயில் நிர்வாகத்துக்கு பூட்டை அன்பளிப்பாக வழங்குவேன். இதற்கு ரூ.2 லட்சம் செலவு ஆகியது’’ என்றார்.

The post ராமர் கோயிலுக்கு 400 கிலோ பூட்டு appeared first on Dinakaran.

Tags : Ramar ,Aligarh ,Ayodhi ,Ubi Artisan ,Ramar Temple ,Dinakaran ,
× RELATED சிதைந்த மோடியின் பிம்பம்..பாஜக தலைமையை...