×

மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு

சென்னை: மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பள்ளி கல்வி பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பதவி(குரூப் 1சி) பணியில் அடங்கிய 11 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு(கணினி வழித்தேர்வு) கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடந்தது. முதல்நிலை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்து தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 113 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணையம் வலைதளம்(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,DNBSC ,Tamil Nadu Government Personnel Examination Nadu ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்...