×

அரசு மருத்துவமனையில் பெண் டாக்டரை கொன்ற பள்ளி ஆசிரியர் டிஸ்மிஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கொட்டாரக்கரை பகுதியை சேர்ந்தவர் வந்தனா(26). டாக்டரான இவர் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மே 10ம் தேதி இரவு ஒரு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியரான பிரதீப் என்பவரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை டாக்டர் வந்தனா பரிசோதித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பிரதீப் அங்கிருந்த கத்தி உள்பட மருத்துவ உபகரணங்களை எடுத்து வந்தனாவை குத்திக்கொன்றார். ஆசிரியர் பிரதீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதீப் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிரதீப்பை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளதாக கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.

The post அரசு மருத்துவமனையில் பெண் டாக்டரை கொன்ற பள்ளி ஆசிரியர் டிஸ்மிஸ் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kotarakarai ,Kollam ,Kerala ,Kottarakarai Government Hospital ,
× RELATED புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி