×

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக பூமனா கருணாகர் நியமனம்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தற்போது தலைவராக உள்ள ஒய்.வி.சுப்பா தலைமையிலான அறங்காவலர் குழு பதவிக்காலம் வரும் 8ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சுப்பாவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வட ஆந்திரா பொறுப்பாளராக நியமித்து அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்.

எனவே அவருக்கு பதிலாக திருப்பதி எம்எல்ஏ பூமனா கருணாகரின் பெயரை முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் இறுதி செய்துள்ளார். ஒய்.எஸ்.ராஜசேகர் முதல்வராக இருந்தபோது பூமனா கருணாகர் அறங்காவலர் குழு தலைவராக பணியாற்றினார். தற்போது அவரது மகன் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் முதல்வராக உள்ள நிலையில் 2வது முறையாக அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்க உள்ளார்.

The post திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக பூமனா கருணாகர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Bhumana Karunakar ,Board of Trustees of ,Tirumala Tirupati Devasthanam ,Tirumala ,YV Subba ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...