×

மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் உத்தரவு

சென்னை: தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், படிப்பில் சேரும் மாணவர்களிடையே, கல்வி கட்டணம், புத்தகம், உணவு, விடுதி உள்பட எவ்வித கட்டணத்தையும் வசூலிக்க கூடாது. ‘புதுமை பெண் திட்டம்’ நிதியுதவி உள்பட அனைத்துவித கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் தகுதி உடையவர்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் சில இடர்பாடுகள் இருப்பதால், கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அந்த கல்லூரி மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

The post மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது: மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Directorate of Medical Education and Research orders ,Chennai ,Tamil Nadu ,Director of Medical ,Education ,and Research ,Santhimalar ,Tamil Nadu government ,Directorate of Medical Education and Research ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...