- கிராமிய விளையாட்டுத் திருவிழா
- ஈஷா அவுட்ரீச் அமைப்பு
- கோவை
- ஈஷா கிராமோட்ஷவம்
- ஈஷா அவுட்ரீச் அமைப்பு
- தின மலர்
கோவை: ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில், ‘ஈஷா கிராமோத்சவம்’ என்ற கிராமிய விளையாட்டு திருவிழா வரும் 12ம்தேதி தொடங்க உள்ளது. இதுகுறித்து ‘ஈஷா கிராமோத்சவம்’ கள ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது: விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் உருவாக்குவதுதான் ஈஷா கிராமோத்சவத்தின் அடிப்படை நோக்கம். சத்குருவால் 2004ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திருவிழா வெறும் 4 தாலுகாவில் ஆரம்பித்து படிப்படியாக தென்னிந்திய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.
இதில் வாலிபால், துரோபால், கபடி போட்டிகள் என 4 பிரிவுகளில் நடக்க உள்ளன. 25,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 60,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம்காண உள்ளனர். இறுதி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகள் தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி முதல் செப்டம்பர் 23ம் தேதி வரை நடக்கிறது. இறுதி போட்டி கோவையில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி சிலை முன்பு நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் வரும் 10ம்தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
The post ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் கிராமிய விளையாட்டு திருவிழா: பங்கேற்கும் அணிகள் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.
