×

சொக்கலிங்கபுரத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய நீர்தேக்க தொட்டி: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம்

 

ராஜபாளையம், ஆக.5: ராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பயன்பாட்டில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதம் அடைந்த நிலையில் இருந்தது. எனவே புதிதாக மற்றொரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமனிடம் மனு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகள் தொடங்கியது. 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை சாத்தூர் எம்எல்ஏ டாக்டர் ரகுராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை, மனோகரன் அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சொக்கலிங்கபுரத்தில் ரூ.20 லட்சத்தில் புதிய நீர்தேக்க தொட்டி: பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Sokkalingapuram ,Bhumi Puja ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்