×

ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல்

 

இளையான்குடி, ஆக. 5: இளையான்குடி செந்தமிழ்நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (48), பதிவு பெற்ற ஒப்பந்ததாரராக உள்ளார். தாயமங்கலம் விலக்கு ரோட்டில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இளையான்குடி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதியில் சாலை பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சம் மதிப்பில் ஆன்லைன் டெண்டர் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் முத்துக்குமாரை போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், கிருஷ்ணாபுரத்துக்கு டெண்டர் ஏன் பதிவு செய்தாய் என மிரட்டியுள்ளார்.

இதனால் போன் இணைப்பை முத்துக்குமார் துண்டித்தார். நேற்று காலையில் நடை பயிற்சி சென்றபோது, அவரது கடையின் முகப்பு மற்றும் பேனர் உடைக்கப்பட்டு, கிழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரை மர்ம நபர் மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில், இளையான்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Muthukumar ,Senthamilnagar ,Thayamangalam ,Dinakaran ,
× RELATED சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்