×

பைப் லைன் பணிக்காக தோண்டப்பட்டதால் சேதமடைந்த தார் சாலை: சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், மேலச்சேரி, பழையசீவரம், வெங்குடி ஆகிய மூன்று இடங்களில் திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து பல்லாவரம், தாம்பரம் நகர மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யபட்டு வருகின்றது. இதற்காக பழைய சீவரம் பகுதியில் இருந்து வாலாஜாபாத், ஒரகடம், படப்பை, மண்ணிவாக்கம் வழியாக பைப் லைன் பதித்து தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யபட்டு வருகிறது.

தற்போது, தாம்பரம் அருகே பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, படப்பை, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைப்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. இந்நிலையில், படப்பை அடுத்த ஆரம்பாக்கம் கூட்டு சாலை அருகில் சாலையில் பள்ளம் தோண்டபட்டு உடைப்பு ஏற்பட்ட பைப் லைன் சீரமைக்கபட்டது. இதனை தொடர்ந்து, பைப் லைன் சீரமைக்கப்பட்டு ஒரு மாதமாகிய நிலையில் சாலை சீரமைக்கவில்லை. ‘இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறது. எனவே, சாலையை சீரமைத்துதர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பைப் லைன் பணிக்காக தோண்டப்பட்டதால் சேதமடைந்த தார் சாலை: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Kanchipuram district ,Melachery ,Palasivaram ,Vengudi ,Dinakaran ,
× RELATED அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு