×

சந்திரபாபு சுற்றுப்பயணத்தின்போது தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மோதல்: 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்; போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு

திருமலை: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சுற்று பயணத்தின்போது தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டனர். மேலும், போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டு கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள குரபாலகோட்டா அடுத்த அங்கல்லுவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் சந்திரபாபுவை பார்த்து ‘திரும்பி போ’ என்று முழக்கம் எழுப்பினர். இதற்கு, எதிராக தெலுங்கு தேசம் கட்சியினரும் கோஷம் எழுப்பினர். இதில், திடீரென இரு கட்சியினரும் மாறி, மாறி கற்கள் வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். அப்போது, போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் போலீசார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகே இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் போலீசாரின் பஸ், ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

The post சந்திரபாபு சுற்றுப்பயணத்தின்போது தெலுங்கு தேசம்- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மோதல்: 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்; போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Desam ,YSR Congressmen ,Chandrababu ,Tirumala ,Telugu Desam ,YSR Congress ,Naidu ,Andhra Pradesh ,Telugu Desam-YSR ,Dinakaran ,
× RELATED தேர்தல் அறிக்கை வெளியிட மறுப்பு;...