மாஸ்கோ: ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதித்து அதிபர் விளாடிமிர் புதின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாஸ்கோவில் தொழில் துறை மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் புதின் நேற்று நடத்திய ஆலோசனைக்கு பிறகு வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதிக்கும் அறிவிப்பினை அவர் வெளியிட்டார். ரஷ்ய பிராண்டுகள், ரஷ்ய கார்கள் மற்றும் பிற ரஷ்ய பொருட்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதின் கூறினார்.இந்த நடவடிக்கை உள்நாட்டு கார் தயாரிப்புகளை ஊக்குவிக்க உதவும் என புதின் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “நாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ரஷ்ய தயாரிப்பு கார்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அது குறைவான ஆடம்பரமாக இருக்கலாம். ஆனால் அதில் பெரும் பிரச்சனைகள் இருக்காது. அது நாட்டிற்கு நல்லது தான்,”என்றார். ரஷ்ய கார் சந்தையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இறக்குமதி செய்யப்படும் சீன கார்கள் தற்போது ரஷ்யாவில் 49% பங்களிப்பை கொண்டுள்ளன. ரஷ்யாவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 40,000 கார்களை சீனா விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ரஷ்ய அரசு அதிகாரிகள் வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதித்து அதிபர் விளாடிமிர் புதின் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.