வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபரைத் தேர்வு செய்யும் கடைசி போர்க்கள மாகாணத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 6ம் தேதியில் அதிகாலையில் தொடங்கி, இன்று வரையில் (நவ. 10) எண்ணப்பட்டு வந்தது. மொத்தமுள்ள 538 தேர்வாளர் வாக்குகளில் 270 வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின், ஜார்ஜியா, வடக்கு கரோலினா, நவாடா, அரிஸோனா போன்ற போர்க்கள மாகாணங்கள்தாம் உண்மையில் அமெரிக்க அதிபரை முடிவு செய்பவையாக உள்ளன. இருப்பினும், பெரும்பான்மை பெறுவதற்கான 270 என்ற வாக்குகளைவிட கூடுதலான வாக்குகளைப் பெற்று, டொனால்ட் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிபரைத் தீர்மானிக்கும் போர்க்கள மாகாணங்களில் ஒன்றான மற்றும் கடைசி மாகாணம் அரிஸோனாவிலும் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 4 நாள்களாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், போர்க்கள மாகாணங்கள் ஒன்றில்கூட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெறவில்லை என்று கூறுகின்றனர்.
The post தொடர்ந்து 4 நாட்களாக நடந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு: கடைசி மாகாணத்திலும் டிரம்ப் வெற்றி appeared first on Dinakaran.