- இன்டர்போல் உதவி
- கடத்தல்
- ஷெய்க் ஹசீனா
- இந்தியா
- பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம்
- டாக்கா
- ஷேக் ஹசினா
- வங்காளம்
- ஹசீனா
- தின மலர்
டாக்கா: வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் ஷேக் ஹசீனாவின் முடிவை எதிர்த்தும், ஹசீனா பதவி விலக வலியுறுத்தியும் மாணவர் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர் . இந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் 450க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மாணவர்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வௌியேறி தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாணவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவியை நாட வங்கதேச இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து முகமது யூனுஸ் தலைமையிலான அரசு வௌியிட்டுள்ள அறிக்கையில், “ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது மனித குலத்துக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கைகளால் 753 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். ஷேக் ஹசீனா மற்றும் தப்பியோடிய பிற நபர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை நாட உள்ளோம். இன்டர்போல் விரைவில் சிவப்பு அறிவிப்பை வௌியிடும். பின்னர் தப்பியாடிய குற்றவாளிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டிக்கப்படுவார்கள்” என தெரிவித்துள்ளது.
The post இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி: வங்கதேச இடைக்கால அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.