×

குளவி கொட்டி முதியவர் பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த மேட்டு வீரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (78), விவசாயி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள வள்ளியம்மன் கோயில் அருகே நடந்து வரும்போது கோயில் அருகே இருந்த ஒரு பனை மரத்தில் இருந்த குளவிகள் வந்து கணேசனை கொட்டியதில் மயக்கமுற்று கீழே விழுந்தார். அவரை உடனே சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தார்.

பனை மரத்தில் பெரிய குளவி கூடு கட்டியுள்ளது அதை அகற்றுங்கள் என்று பல முறை திருக்கழுக்குன்றம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் அந்த குளவி கூட்டை அகற்றாமல் மெத்தனம் காட்டியதால் தான் கணேசனை கொலவி கொட்டியது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு தான் தீயணைப்பு துறையினர் வந்து பெயருக்கு குழவி கூட்டை அகற்றினார்கள். ஆனாலும் இறந்துப்போன கணேசனின் உறவினர்கள் உடலை மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு கொண்டு செல்லாமல் அங்குள்ள வள்ளியம்மன் கோயில் அருகே வைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

The post குளவி கொட்டி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Ganesan ,Veerakuppam ,Thirukkalukunram ,
× RELATED திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில்...