×

ரூமியான் எம்பிவி

டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனமும் மாருதி சுசூகி நிறுவனமும் இணைந்து சர்வதேச சந்தையிலும், இந்தியச் சந்தையிலும் கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வகையில், இரு நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பாக டொயோட்டா ரூமியான் என்ற எம்பிவி, இந்தியச் சந்தையில் இந்த ஆண்டு பண்டிைக சீசனில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசூகியின் எர்டிகா எம்பிவி சமீபத்தில் தென் ஆப்ரிக்கச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் ரூமியான் என்ற பெயரில் இந்தியச் சந்தைக்கு வர உள்ளது.

இதில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது. இதுதவிர 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, குரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.

ஏற்கெனவே இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இன்விக்டோ, கிளான்சா, ஹைரைடர் மற்றும் அர்பன் குரூசர் ஆகிய வாகனங்களை சந்தைப்படுத்தியுள்ளன. இந்த வரிசையில் ரூமியான் 5வது தயாரிப்பாக இருக்கும். இவற்றில் அர்பன் குரூஸர் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

The post ரூமியான் எம்பிவி appeared first on Dinakaran.

Tags : Rumian ,Toyota Kirloskar ,Maruti Suzuki ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...