×

இயக்கப்பட்ட டவுன் பஸ் மாற்றம்

சேலம், ஆக.3: அரியானூரில் இருந்து மகுடஞ்சாவடி வரை 10க்கும் மேற்பட்ட மருத்துவம், இன்ஜினியரிங், பாலிடெக்னிக், பல் மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரிகளும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளி, கல்லூரிகளுக்கு சேலத்திலிருந்து வழி நெடுகிலும் செல்லும் பெரும்பாலான மாணவர்கள், அரசு டவுன் பஸ்ஸை பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக சேலத்திலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் 87 டவுன்பஸ் மற்றும் 8.36க்கு புறப்படும் 62 ஆகிய பஸ்களே பிரதானமாக உள்ளது. இதனால், இரு பஸ்களிலும் கூட்டம் அதிகரித்து மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. அத்துடன், பஸ் ஏற முடியாமல் 30க்கும் மேற்பட்டோர் அரியானூர் பஸ் ஸ்டாப்புடன் நின்றுவிடும் நிலையும் இருந்தது. இதனால், இந்த முக்கிய நேரத்தில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, சேலத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் வகையில், 52 என்ற பஸ் தற்காலிகமாக இயக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏதுவாக இருந்தது. ஓரிரு நாட்கள் இயக்கப்பட்ட இந்த பஸ், திடீரென நேரமாற்றம் செய்யப்பட்டது. இதனால், மருத்துவம், இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மாணவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். அதே சமயம், வேம்படிதாளம் அரசுப்பள்ளி மாணவர்கள், 8.15 மணிக்கு செல்லும் 87 பஸ்ைஸ தவறவிட்டால், அடுத்து 9.15 மணிக்கு வரும் 55 டவுன்பஸ் வரை காத்திருக்க வேண்டும். எனவே, அரியானூர், சீரகாபாடி, காகாபாளையத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக இயக்கப்பட்ட 52 டவுன்பஸ்ைஸ மீண்டும் அதே நேரத்திலும், காகாபாளையம் வரையிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post இயக்கப்பட்ட டவுன் பஸ் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Aryanur ,Makudanjavadi ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...